பிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் மக்கின்டோஷ்(23) என்ற அழகி தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிரித்தானியாவின் ஸ்டபோர்டுஷைரில் கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது சுஸெல் என்ற நாயை அன்பாக தட்டிக் கொடுத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் அழகியின் முகத்தை கடித்து குதறியதால், அவர் தன் மூக்கு முகத்தில் இருந்து கிழிந்து தொங்குவதைப் போல் உணர்ந்ததாக கூறினார்.
அதுமட்டுமின்றி இந்த தாக்குதலினால் அவரின் முகம் கோரமானது. இதனால் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.
இதையடுத்து சமூகவலைத்தளத்தில் தன் சிகிச்சை குறித்து கூறுகையில், தனக்கு தன்னம்பிக்கை ஊட்டி, மீண்டு வர காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் வாழ்வின் கடினமான சூழலை கடந்து செல்கையில், அன்பைப் பொழிந்து, உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும்ம் உங்கள் ஆதரவின்றி நான் மீண்டு வந்திருக்க முடியாது, நீங்கள் கூறிய ஒவ்வொரு ஆறுதல் வார்த்தைகளை அளவிட முடியாதது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், இது போன்ற சூழலின் போது தன்னை தனியாக தவிக்கவிடாமல் அரவணைத்து செல்லும் நபர்களால் நான் எவ்வளவு அதிர்ஷ்டம் நிறைந்தவன் என்பதை உணர்வதாகவும், இவ்வளவு அக்கறை செலுத்தும் நீங்கள் எப்போதும் என்னுடனே தொடர வேண்டும் கூறியுள்ளார்.