பிரித்தானியாவில் இருந்து வரும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய தடை!!

310

பிரித்தானியாவில் இருந்து..

பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் நேற்று நள்ளிரவு முதல் நாட்டுக்கள் நுழைய இலங்கை அனுமதி மறுத்துள்ளது. பிரித்தானியாவில் இந்த பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை காரணமாக அரசாங்கம் நேற்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி உட்பட 40 நாடுகளுக்கும் அதிகமான நாடுகள் இதுவரையில் பிரித்தானியாவின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மீள் அறிவிப்பு வரையில் பிரித்தானியாவில் இருந்து வரும் இலங்கையர்களுகளும் நாட்டிற்கு நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து இலங்கையர்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்படாதென விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.