பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் காலை பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! நடந்தது என்ன?

757

இந்தியா…

இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி ஜெயலலிதா. இருவரும் பிரபல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரே மகள் நேஹா (24). கடந்த ஆண்டு நேஹா டாக்டருக்கு படித்து முடித்து மேற்படிப்புக்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை நண்பர்களுடன் கோவாவில் கொண்டாட நேஹா ஆசைப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் உடனே அவரது ஆசையை நிறைவேற்ற நண்பர்கள் மற்றும் சில உறவினர்களுடன் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவரது பிறந்தநாள் நள்ளிரவில் நண்பர்களுடன் ஜாலியாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

பின்னர் அன்று இரவு மகிழ்ச்சியுடன் உறங்க சென்ற நேஹா காலையில் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். நேஹாவுக்கு அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேஹாவின் உடல் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. செல்லமாக வளர்த்த ஒரே மகள் இறந்துவிட்டதாக வந்த செய்தி பெற்றோர்களை நிலைகுலைய செய்தது.