புதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்!!

491

நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

அமெரிக்காவில் வீடு ஒன்றின் கூரையில் வழி ஒன்று இருப்பதைக் கண்ட அந்த வீட்டை வாங்கிய நபர் அந்த வழியாக நுழைந்து சென்றுள்ளார். பார்த்தால், அங்கு ஒரு வீடே மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அது எங்கே முடிகிறது என்று பார்த்தபோது, தனது அறையிலிருக்கும் ஒரு அலமாரிதான் அந்த வீட்டின் கதவு என்பதை அறிந்தபோது ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளார் அவர்.

ஒரு காலத்தில் அந்த வீடு விற்கப்பட்டபோது, அதை ஆலயமாக மாற்றியுள்ளனர். அப்போது, அந்த கூடுதல் வீடு வேண்டாம் என, அதை அப்படியே பூசி மூடி விட்டிருக்கிறார்கள்.

இப்போது அந்த வீட்டை வாங்கியவர் தற்செயலாக அந்த வீட்டுக்குள் இன்னொரு வீடு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். வெளியே இருந்து பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்பதை காண்பிப்பதற்காக தனது வீட்டின் வெளிப்புற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட அந்த ’வீட்டுக்குள் வீடு’ புகைப்படத்தைக கண்ட மக்கள், பேய் படம் ஒன்றில் வருவதுபோல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிலர், நார்னியா என்ற படத்தில் அலமாரிக்குப்பின் வேறொரு உலகுக்கு வழி இருப்பதுபோல் இந்த அலமாரி உள்ளது என்று கூறியுள்ளனர்.