புனீத்..
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் அளித்த கண் தானம் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றுள்ள அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது.
புனீத் ராஜ்குமார் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய கண்களைத் தானம் செய்வதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்துள்ளார்.
அதன்படி புனீத் ராஜ்குமார் மறைந்த பின்னர் அவருடைய கண்களை குடும்பத்தினர் தானமாக கொடுத்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
வழக்கமாக தானமாகப் பெறப்பட்ட கண்கள் மூலம் இருவருக்குத்தான் அதை பொருத்த முடியும். அதன்மூலம் இருவர் மட்டுமே பாரவை பெறுவார்கள்.
ஆனால், புனீத் ராஜ்குமார் செய்த கண் தானம் மூலம், நான்கு பேருக்கு பார்வை கிடைத்த அதிசயம் நடைபெற்றுள்ளது.
“இது குறித்து மருத்துவர் புஜங்கஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார். “வழக்கமாக இரண்டு கண்கள், இருவருக்கு மட்டுமே பொருத்தப்படும். ஆனால், புனீத்தின் கண்கள் மூலம் நால்வர் பார்வை பெற்றுள்ளனர். ஒவ்வொரு கண்ணையும் இரண்டாக வெட்டி, விழிப்படலத்தை முன்பகுதி, பின்பகுதி எனத் தனியாகப் பிரித்தோம். இதன்மூலம் முன் பகுதி விழிப்படலம் இருவர், பின் பகுதி விழிப்படலம் இருவர் என நான்கு பேருக்கு பொருத்தினோம்.”
முதன் முறையாக நாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. மறைந்த நடிகர் புனீத்தின் இரு கண்களும் ஆரோக்கியமாக இருந்தன.
எனவே, இந்த முயற்சி சாத்தியமானது. ஒரு பெண், 3 ஆண்கள் என நான்கு பேருக்கு புனீத்தின் கண்களைப் பொருத்தியுள்ளோம். இந்த நால்வருமே இளம் வயதினர்தான்.
அவர்கள் நால்வருமே ஆரோக்கியமாக உள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சையை அக்டோபர் 30 ஆம் திகதி முழுவதும் மருத்துவர்கள் மேற்கொண்டதாக டாக்டர் புஜங்கஷெட்டி தெரிவித்துள்ளார்.