சோக சம்பவம்..
புதுச்சேரியில் புற்றநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாய் மகனின் முகத்தை பார்த்த சற்று நேரத்தில் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகே ஏனாம் பிராந்தியம் உள்ளது. இங்கு உள்ள பலர் பணிக்காக அருகாமையுள்ள பல நகரங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏனாம் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனு, தனது மனைவி லட்சுமியுடன் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இவரது தாய் லட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவரது உடல் மிகவும் மோசமடைந்துள்ளது. அவரது உறவினர்கள் மகனுக்குத் தகவல் தந்தனர். பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லை. கார் வைத்து வர வசதியில்லை.
இச்சூழலில் தனது மனைவி லட்சுமியுடன் தனித்தனி சைக்கிள்களில் ரேவு ஸ்ரீனு ஏனாம் பிராந்தியத்திற்கு புறப்பட்டு வந்தார். வழியில் இத்தம்பதியை பொலிஸார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்த நிலையில், தனது தாய் புற்றுநோயால் மிகவும் பாதிப்பில் உள்ளதால் அவரை காண செல்வதாக கூறியவுடன், பொலிஸார் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
வழியில் மக்களும் உதவிய நிலையில், 480 கிலோமீற்றர் தொலைவு பயணத்தைக் கடந்த 14-ம் திகதி தொடங்கி 17-ம் திகதி நள்ளிரவு முடித்து ஏனாம் வந்தடைந்தனர். வெளிமாநிலத்தில் இருந்து ரேவு ஸ்ரீனு, லட்சுமி இருவரும் ஏனாம் வந்ததால் அவர்களை அதிகாரிகள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தி வைத்தனர்.
அப்போது அவரது தாயின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் கடந்த 18-ம் திகதி தாயை பார்க்க மகனை அனுமதித்தனர். தனது மகனை பார்த்த சிறிது நேரத்திலேயே தாயின் உயிர் பிரிந்தது.
தாயாருக்கு இறுதிச்சடங்கை செய்த பின்பு அவர் தனது மனைவியுடன் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாமுக்குத் திரும்பியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.