சாமியார் நித்தியானந்தா மீது பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த வழக்கில் குர்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தா மீது பாலியல் தாக்குதல், மோசடி மற்றும் குற்றவியல் நடவடிக்கை ஆகிய புகாரை அவரின் முன்னாள் சீடர் லெனின் கருப்பையா பொலிசில் கடந்த 2010-ல் அளித்தார்.
அதை ஒட்டி நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த டிசம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த பெண்களின் சம்மதத்துடன் உறவு கொண்டதாக நித்தியானந்தா சார்பில் வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதனால் இது குற்றமாகாது எனவும், அதனால் தன் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யாமல் வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவ்வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் பெண்களை நித்தியானந்தா வற்புறுத்தி சம்மதம் பெற்றிருக்கலாம்.
அதனால் இது குறித்து விசாரிக்க உடனடியாக நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.