பெற்ற மகளை கொலை செய்தது ஏன் : தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!

1354

வங்கதேசத்தில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சயித் அலி என்பவருக்கு பியூட்டி அக்தர் (16) என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பியூட்டி அக்தர் திடீரென காணாமல் போன நிலையில் அங்குள்ள புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கொலையாளி குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பியூட்டியின் தந்தை சயித்தே மகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், பியூட்டியை எங்கள் ஊரை சேர்ந்த பாபூல் மியா என்பவன் பலாத்காரம் செய்துவிட்டான். இது குறித்து பொலிசில் புகார் அளித்தும் அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நேரத்தில் தான் உள்ளூர் தேர்தலில் என் நண்பர் மெள்னாவின் மனைவி, பாபூல் தாயிடம் தோல்வியடைந்திருந்தார்.

இதையடுத்து என் மகளை கொலை செய்து விட்டு அந்த பழியை பாபூல் மீது போட்டு விட்டு அவரை பழி வாங்கி விடுவோம் என மெள்னா என்னிடம் யோசனை கூறினார்.

இதையடுத்து சில அடியாட்களுடன் சேர்ந்து நானும் மெள்னாவும், பியூட்டியை கடத்தி கத்தியால் குத்தி கொலை செய்தோம் என கூறியுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்