பெற்ற மகளையே பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

317

ஆந்திரா….

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வரும் இந்த மாணவியின் தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டது.

இந்த நிலையில் தான் அந்த அந்த மாணவியின் தாய் தனது கணவருக்கு ஒரு கிட்னியை தானமாக கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவியின் தாய் தந்தை இருவருமே ஒரு கிட்னியுடனே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த கொடூர தந்தை.

தொடர்ந்து தந்தையின் தொல்லை தாங்கமால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பள்ளி மற்றும் வீட்டிலும் யாரிடமும் சரியாக பேசாமலே இருந்துள்ளார்.

மேலும் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு செல்லாமலே இருந்ததை கண்ட பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியுடன் விசாரித்துள்ளார்.

உடனே அந்த மாணவி தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை மாணவி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து புகாரின்பேரில் 42 வயதான மாணவியின் கொடூர தந்தையை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்காள் வெளியாகியன.

மாணவி நீண்டநேரமாக செல்போன் பயன்படுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை அதையே சாதகமாக்கி மாணவியை தொடர்ந்து மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.