பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

695

சென்னை….

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இதனால் சிறுமி பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதை வெளியே சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார்.

இதை பயன்படுத்திக் கொண்டு சிறுமியின் தந்தை தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.

அப்போது அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்

பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தந்தைதான் பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஏழுமலை மீது காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தந்தை வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.