புதுச்சேரி…..
புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி காவல்துறையில் காவலராக கணேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தி என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குடும்பம் நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் சண்டையிட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சாந்தி 5 வயது மகளுடன் வசித்து வரும் நிலையில், சில நாட்களாக முன்பு சாந்தி குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் சாந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்