சஞ்ஜாரி விஜய்……..
கன்னட சினிமாவில் நடிகராக இருப்பவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார்.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சஞ்ஜாரி விஜயின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருப்பதால், அதற்காக தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.