பொப் பாடகரை மணக்கிறாரா பிரியங்கா சோப்ரா? வெளியான தகவல்

571

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பொப் பாடகர் நிக் ஜோனஸை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹிந்தி திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவரும் பாடகர் நிக் ஜோனஸும் நியூயார்க் நகரங்களில் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

மேலும், அமெரிக்காவில் நடந்த நிக் ஜோனஸ் குடும்ப திருமண் நிகழ்ச்சியிலும், பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டது இவர்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.அத்துடன், பிரியங்கா சோப்ரா தனது வீட்டிற்கு ஜோனஸை அழைத்துச் சென்று தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரியங்காவின் குடும்பத்தினருக்கு நிக் ஜோனஸை பிடித்து விட்டதாகவும், திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியங்கா-ஜோனஸ் இருவரும் கோவாவிற்கு சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு மும்பைக்கு திரும்ப உள்ளனர்.இவர்களது திருமணத்தை அடுத்த மாதம் நடத்த, இரு வீட்டாரும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.