போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

320

போலிச் செய்திகளை…

ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து ஆராயப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவருக்கு எதிராக அவதூறு சுமத்தும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் சேற்றை வாரியிறைக்கும் தகவல்களை வெளியிடுகின்றன.

எந்த உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் பதிவு செய்யப்படாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கருதுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.