ப்ரேக் அப் பின் நடந்த சோகத்தை வெளிப்படையாக கூறிய ராஷி கண்ணா!!

35

ராஷி கண்ணா..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் அவரது முதல் படம் இமைக்கா நொடிகள், அதன்பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.

இந்நிலையில், ராஷி கண்ணா தான் நடித்துள்ள தி சபர்மதி ரிப்போர்ட் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப்ரேக் அப் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” எனக்கு ப்ரேக் அப் நடந்த பின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என்னால் அதில் இருந்து வெளிவர முடியவில்லை அப்போது என் நண்பர்கள் தான் என்னிடம் நடிப்பில் கவனம் செலுத்த கூறினார்கள்.

அதன்படி, நான் நடித்து தெலுங்குவில் ஒரு படம் வெளியானது. அப்போது ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். அன்று தான் எனக்கு ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று தெரியவந்தது. அன்று முதல் நான் நடிப்பை மட்டும் தான் காதலித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.