இளம் பெண்ணுக்கு அக்கா கணவரால் நடந்த விபரீதம் : கதறித்துடித்த பரிதாபம்!!

381

மதுரை….

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர்.

இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

இந்தநிலையில், தொழில் போட்டி காரணமாக அக்காள் கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது. கடந்த 6-ந் தேதி மாலை கலைச்செல்வி,

அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் சிங்கதுரையிடம் அங்கு இளநீர் கடை போடக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே முத்துலட்சுமி தனது தந்தைக்கு ஆதரவாக நாகராஜை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியை ஓங்கி வெட்டினார்.

இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கையை ஈவு இரக்கமின்றி தொழில் போட்டிக்காக அக்காவின் கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.