மச்சினியிடம் எல்லை மீறிய அக்கா கணவர்… புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் : திடுக்கிடும் தகவல்!!

1109

திருச்சி….

திருச்சி மாவட்டம் தஞ்சாவூர் சாலையில் உள்ள தனரத்னம் நகரைச் சேர்ந்தவர் ரஃபிக். 60 வயதான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். இதில் மூத்த மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சையது முகமது அப்பாஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

மூத்த மகளுக்கு குழந்தை பிறந்தவுடன் அவருக்கு துணையாக இருப்பதற்கு இளைய மகள் சையது அலி பாத்திமாவை அனுப்பி வைத்துள்ளார் ரபிக். அக்கா கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டதை வைத்து அவரது வீட்டுக்கு சென்ற பாத்திமா, ஒரு வயது குழந்தையை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளார்.

ஆனால், முகமது, தனது குழந்தையை கவனித்துக் கொள்ள வந்த மச்சினி மீது ஆசை வந்து, அதனை நனைவாக்கவும் ஒரு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பாத்திமாவின் அந்தரங்க வீடியோவை எடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தனது இச்சைகளை நிரைவேற்ற நினைத்த அப்பாஸிற்கு அடிபணிந்தார் பாத்திமா.

ஒரு முறையோடு நிறுத்தாம்ல், இந்த உறவு பல முறை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் பாத்திமா கருவுற்றிருக்கிறார். இதையறிந்த த்னந்தை ரஃபிக், தனது மருமகன் அப்பாசிடம் சண்டை போட்டிருக்கிறார். பின், பாத்திமாஐயும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்ததால் சண்டை தணிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மச்சினிச்சியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அப்பாஸ், பாத்திமாவுக்கும் தினம் சித்ரவதை கொடுக்கத் தொடங்கியுள்ளான். இதனால் பாத்திமாவுக்கு பிறந்த குழந்தைக்கு சில நாட்களாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது.

குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் பல லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து கணவர் அப்பாசிடம் பணம் கேட்டார் பாத்திமா. ஆனால் ஒரு பைசா கூட தர முடியாது என கூறியதோடு அப்படியே அவரிடம் இருந்து விலகி விட்டார் அப்பாஸ்.

தனது அக்காவின் வாழ்க்கையில் விளையாடியதோடு மட்டுமல்லாமல் தன்னையும் சீரழித்து விட்டதாய் திருச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார் பாத்திமா.

தன்னை ஏமாற்றிய கணவனை பழிவாங்குவதற்காகவே இந்தப் பெண் வீதிக்கு வந்திருந்தாலும், அவரது குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்ப்பது யார்? காவல்நிலையமா? நீதிமன்றமா?