அமெரிக்கா…
அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியைச் சேர்ந்த பெண் சியாரியா 24 வயதான இந்த பெண் சாம் என் 28 வயது நபரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சியாரியாவிற்கு ஏற்கனவே கேயில் என்ற நபருடன் உறவு இருந்தது.
அந்த உறவை முறித்துக்கொண்டு தான் சாமை காதலித்துள்ளார். இந்த விஷயம் சாமிற்கும் தெரியும். இந்நிலையில் சாம் – சியாரியா திருமணத்திற்கு சியாரியா தனது முன்னாள் காதலன் கேயிலை அழைத்துள்ளார்.
ஆனால் இது சாமிற்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு தம்பதிகள் இருவரும் வழக்கமான ஆடை உடுத்தி திருமணத்திற்கு தயாராக இருந்தனர்.
அப்பொழுது சாம் தனது நண்பர்களுடன் ம.து கு.டித்துள்ளார். இதை பார்த்ததும் சியாராவிற்கு கோ.பம் வந்துள்ளது.
இந்நிலையில் சியாராவின் முன்னாள் காதலன் கேயில் சியாராவிடம் சாமி திருமணம் செய்ய வேண்டாம். நாம் இருவரும் ஓடிப்போய் விடலாம் என சொல்லியுள்ளார்.
சியாராவிற்கு அது தான் சரி என பட்டது. உடனடியாக எதையும் யோசிக்காமல் தன் முன்னாள் காதலுடன் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டார் சியாரா. இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் கேயிலுக்கு வயது 21 தான். அதாவது சியாராவை விட 3 வயது சிறியவர் கேயில்.
அவர் ஓடிப்போனதால் திருமணம் நின்றது. இந்த ச.ம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.