மணமேடையில் மணமக்களுக்கு பாட்டிலில் தரப்பட்ட பரிசுபொருளால் வியப்பு : என்ன தெரியுமா?

611

தமிழ்நாட்டில் திருமணத்தின் போது மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரபு மற்றும் திவ்யா ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றபோது, சக ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து 4 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்துள்ளனர்.

இந்த வித்தியாச பரிசு மணமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பெட்ரோல் விலை உயர்வால் மணமகன் பாதிக்கப்படாமல் இருக்க இந்த பரிசு அவருக்கு உதவும் என சக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.