மனதில் இருந்து நீங்காத ஓவியாவை போலி என ஒதுக்கி வைத்த கூட்டம்! கற்று கொடுத்த கண்ணீர் வாழ்க்கை..?

733

அண்மையில் ஓவியா தனது 27வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவரின் வாழ்க்கை ஆரம்பத்தில் சோகமானதாக இருந்தாலும், தற்போது வெற்றிகள் மட்டும் அவரை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஓவியாவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அவரின் திறமையினால் இந்த வெற்றிகள் துறத்த வில்லை.அவரின் நேர்மை, உண்மை, எளிமை என்று ஏராளமான நல்ல குணங்கள் தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இவர் ஆரம்பத்தில் நடித்த படங்களில் கூட பெயர் சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் அமைய வில்லை என்றுதான் கூற வேண்டும்.இவர் 2010இல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் 2017இல் விஜய் தொலைக் காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஓவியாலை போலி என்று ஒதுக்கி வைத்தனர். ஆனால், அதுவே மக்களுக்கு அவர் மீது அன்பு வர காரணமாக அமைந்தது. ஓவியா கண்ணீருடன் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக ஓவியா பெயரில் ஆர்மிகள் எழுந்தது.

இதில்தான் அவரின் உண்மையான முகம் தெரிய வந்தது. அதன் பின் அவர் மார்க்கெட் எகிறியது. தன் மனதில் பட்டதை பேசியது தான் ரசிகர்களை கவர்ந்தது. அவர் நடிக்காமல் அவராகவே இருந்ததால் கொண்டாடுகிறோம் என்றார்கள் ரசிகர்கள்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு, திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.

தாயை இளந்து தனிமையில் தவித்திருந்தாலும், இன்று எத்தனையோ கோடி மக்கள் அவரை தன் மகளாக பார்க்கின்றனர்.

தற்போது, டுவிட்டரில் ஓவியா ஆர்மி துவங்கி தலைவியாக அவரை ஏற்று கொண்டுள்ளனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஓவியா சொன்ன, ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், ஒரே சிரிப்பா இருக்கு சார், வாழைப்பழம் கொடுங்க எனஅவர் பேசிய வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

தற்போது, பல நல்ல கதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார். நாம் ஒவ்வொருவரும் ஓவியாவை போல உண்மையாக இருந்தால் வெற்றி நம்மை தானாக தேடி வரும் என்பது மட்டும் உண்மை.