உத்தர பிரதேசம்….
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே இருக்கும் குல்மோஹர் விஹார் என்ற பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவ் குப்தா. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபிதா என்ற இளம்பெண்ணுக்கு திருமணமானது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சஞ்சீவ், தனது மனைவியை நன்றாக கவனித்து வந்துள்ளார்.
இருப்பினும் இவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு தற்போது 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், இவர்களுக்குள் சண்டை இன்னும் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனால் மனைவி அடிக்கடி கணவரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனவன் மனைவி இடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் கோபப்பட்ட மனைவி ஷோபிதா, கணவனிடம் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். கணவரும், இது வழக்கமாக நடப்பது தான் என்று எண்ணி, அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
மேலும் மனைவியை தூக்கில் தொங்குமாறும் கடுமையாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரப்பட்ட மனைவி, கணவன் முன்னிலையிலேயே தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இதையடுத்து பதறிப்போன கணவர் இதுகுறித்து மனைவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள், இது குறித்து கணவரிடம் கேட்டனர்.
அப்போது அவர், சோபிதா முதல் முறை தற்கொலை செய்ய முயன்ற போது அதனை வீடியோ எடுத்ததாகவும், அது சோபிதா வீட்டாருக்கு அனுப்பப்போவதாக மிரட்டியதால் அவர் அந்த முயற்சியை கை விட்டதாகவும் கூறினார். அதோடு தற்போது தனது மனைவி இவ்வாறு செய்து கொள்வாள் என்று தான் எண்ணவில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக்கேட்டதும் அதிர்ந்த பெற்றோர், இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சோபிதாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். பின்னர் கணவரிடம் இருந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மனைவி தூக்கு போடும் போது அதை தடுத்து அறிவுரை கூறுவதை விடுத்து, இப்படி செல்போனில் கணவனே வீடியோ எடுத்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.