மனைவியின் செயலால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு : காரணத்தை கேட்டு ஆடிப்போன நீதிபதி!!

736

உத்தரபிரதேசம்….

மனைவி தினமும் குளிப்பதில்லை என்று கணவர் விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு இடையே ஒரு விசித்திரமான சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அதில், இனியும் தன் மனைவியுடன் தன்னால் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றிக்கிறார் கணவர். இதையடுத்து, அந்த இளைஞரின் விவகாரத்திற்கான காரணத்தைக் கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

எதற்காக தன்னால் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது எதற்காக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் என்று கேட்டதற்கு, தன் மனைவி தினமும் குளிக்காமல் இருக்கிறார்.

அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவகாரத்திற்கான காரணத்தினை மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் அந்த கணவன். அதே நேரத்தில் என் கணவருடன் நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்.

என்னால் பிரிந்து செல்ல முடியாது என அவரின் மனைவி உறுதியுடன் கூறுகிறார். இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த நீதிபதி, கணவருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், மனைவி தினமும் குளிக்கவில்லை என்பதற்காக கணவன் விவாகரத்து கேட்ட விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.