ஆம்பூர்…..
ஆம்பூரில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் ராஜாமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி நந்தினி தகராறு செய்ததாக தெரிகிறது.
இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நந்தினி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கணவன் ராஜாமணி கூறியுள்ளார்.
ஆனால் தலையின் பின்புறம் பலத்த காயங்கள் இருப்பதை அறிந்த உறவினர்கள் நந்தினி அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து ராஜாமணியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.