மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்த கணவர் : தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி!!

281

கோவை….

கோவையை அடுத்த சிறுமுகை அடுத்த கெம்பண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி (45). இவர் குடும்பத்துடன் ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உதயகுமார் என்பவர் ஆந்திராவில் வசித்து வருவதாகவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு உதயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சந்திரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

மேலும் உதயகுமார் தனது மனைவியை அரை நிர்வாணமாக்கி வீட்டிலிருந்து வெளியே துரத்தி விட்டுள்ளார். இதைப் பார்த்த செந்தாமரைச் செல்வி தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த உதயகுமார் தன் வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களை விட்டு அவரது மகள் நிவேதா மற்றும் அருகில் வசிக்கும் லத்திகா அவரது உறவினர் ஆகிய 3 பேரையும் கடிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து செந்தாமரைச் செல்வி சிறுமுகை காவல் ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகாயிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உதயகுமாரை கைது செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.