மனைவியை குத்தி கொன்ற கணவன் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சி காரணம்!!

320

கள்ளக்குறிச்சி….

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பேபி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் இரவு லோகநாதன் மனைவி பேபியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறியதால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியை பேபி அருகிலிருந்து கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த பேபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மனைவி இறந்த துக்கத்தில் லோகநாதன் விஷமருந்தி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

லோகநாதன் விழுப்புரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேபி அக்கா சரோஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.