உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு பெண், தனது குடும்பத்தில் உள்ள மிக நெருக்கமான மற்றும் தெரிந்தவர்களால் தான் அதிக அளவு வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள்.
தாம் கொடுமைக்கு ஆளாகிறோம் என்பதை அறிந்திருந்தும், அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய் பெண்கள் இருக்கிறார்கள்.தற்போது, சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தை சேர்ந்த துஷாருக்கு திருமணமாகி 4 வயதில் குழந்தையும் உள்ளது. இவர் அரச அதிகாரி சுக்லாஜி என்பவரிடம் தொழில் விடயமாக ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தது.
சுக்லாஜியை சந்தோஷப்படுத்த மனைவியை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளார் துஷார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் மற்றும் அவரது தாயும் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதேவேளை, இது குறித்த காணொளி சமூக வளைதளங்களில் வெளியாகியமையை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
https://youtu.be/PyKcFIwfEyI