மனைவியை சரமாரியாக வெட்டிய குடிகார கணவன் – இதற்கெல்லாமா கொலை செய்வாங்க?

770

திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை குடிகார கணவன் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி தனது இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வேலைக்கு போகாமல் கணவர் குடித்துவிட்டு தன்னிடம் அடிக்கடி தகராறு செய்வதாக மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஐயப்பன் மனைவியை அருகில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தப்பியோடி தலைமறைவாக இருந்த ஐயப்பனை பொலிசார் கைது செய்தனர்.