மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் சென்ற கணவன் சொன்ன அ திர்ச்சிக் காரணம்!!

309

மகாராஷ்டிரா..

இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடும்பம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் திகதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது, மனைவியிடம் தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், தான் உ யி ர் பிழைக்கமாட்டேன் எனவும் கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் ப த ற் ற ம் அடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மிஸ்ராவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அதன் பின் மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை.

இதனால் ப த ற் ற ம் அடைந்த மனைவி தனது கணவரை கா ணவில்லை என காவல் நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் அதன் அடிப்படையில் வைத்து வி சாரணை மேற்கொண்டனர்.

பு கா ர் அளித்தார். மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் மேற்கொண்ட காட்சி அதில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வி சாரணையை தீவிரப்படுத்த பொலிசார் மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை பி டிப்பத ற்காக மும்பை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர். அங்கு இந்தூரில் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு பொலிசார் அ தி ர் ச் சி அடைந்தனர்.

உடனடியாக, மிஸ்ராவையும், அந்த பெண்ணையும் மும்பை அழைத்து வந்து பொலிசார் வி சாரணை நடத்தினர். அந்த வி சாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருந்து வந்ததும் அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்தது.

இதற்காக திட்டம் தீட்டிய மிஸ்ரா தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தான் உயிர்பிழைக்கமாட்டேன் என கூறிக்கொண்டு தனது கள்ளக் காதலியுடன் இணைந்து மத்தியபிரதேசம் சென்றுள்ளார்.

அங்கு யாருக்கும் தெரியாமல் தனது காதலியுடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் என்பது வி சாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.