மரணமடைந்த 18 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் உயிர் பிழைத்த முதியவர்: வியக்க வைக்கும் சம்பவம்

565

பிரான்சில் 53 வயது முதியவர் ஒருவர் நீண்ட 18 மணி நேரம் இதயம் வேலை செய்யாத போதும் வியக்க வைக்கும் வகையில் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது அந்த முதியவரின் உடல் வெப்பநிலையானது கடுமையாக வீழ்ச்சியடைந்ததே அவர் உயிர் பிழைக்க காரணம் என தெரிய வந்துள்ளது.

மிக மோசமான தருணங்களில் உலகில் பலரும் மரணத்தை நேரிடையாக கண்ட பின்னர் அற்புதமாக உயிரோடு மீண்டு வந்துள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை என கைவிட்ட பின்னரும் மீண்டு வந்துள்ளனர்.

அந்த வகையில் பிரான்சில் 53 வயது முதியவருக்கு அப்படியான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த முதியவர் தமது சகோதரரின் குடியிருப்பில் இருந்து வீடு திரும்பும் நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சுயநினைவை இழந்த நிலையில் ஒரு நதிக்கரையில் இருந்து குறித்த முதியவரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

அவரது உடல் வெப்பமானது மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் அப்போது காணப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவர் இறந்து விட்டதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நீண்ட 18 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த முதியவர் அற்புதமாக உயிருடன் மீண்டு வந்துள்ளார்.

தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும், அவரால் நடக்க முடிகிறது, கூடிய விரைவில் பூரண குணமடைவார் எனவும் மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மாரடைப்பின்போது அவரது உடல் வெப்பம் கடுமையாக சரிவை கண்டதே, அவரது முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் இருந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலையே நீண்ட 18 மணி நேரம் அவரது இருதயம் வேலை செய்யாமல் இருந்த போதும் அவரால் உயிர் பிழைக்க முடிந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.