கடலூர்…
தமிழகத்தில் மணமகன் கன்னத்தில் மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள் சம்பவத்தில் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் படி நேற்று முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்ததால், ஆட்டம், பாட்டம் என சென்று கொண்டிருந்துள்ளது.
அப்போது மணப் பெண், உறவினர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதால், இதைக் கண்ட மணமகன் ஏன் இப்படி செய்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அதன் பின் ஒரு கட்டத்தில் அவரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மணப் பெண் வேதனையில் இருந்துள்ளார். மணப்பெண்ணின் தந்தை திருமணத்திற்கு முன்னரே இப்படி செய்தால் எப்படி என்று வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் மணப் பெண் நான் இவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி, உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர் மறுநாளே அவருடன் திருமணத்தை முடித்திருந்தனர்.
இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் தீயாக பரவியதால், இது குறித்து மாப்பிள்ளையான ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், இந்த சம்பவம் தொடர்பாக பண்ட்ருட்டியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு பேர் வீட்டிலும் பேசிதான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பு டிஜே பார்ட்டி அவர்கள்தான் வைத்திருந்தனர்.