ராஜஸ்தான்…
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின் தந்தை பல்வந்த் சிங்குக்கும் (வயது 64) தகாத உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனால் விக்ரம் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் பல்வந்த் சிங்கும், பூஜாவும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை விக்ரம் சிங் ஒரு நாள் இரவு கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது தனது தந்தையையும், மனைவியையும் அவர் கண்டித்துள்ளார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என மகன் விக்ரம் சிங்கை தந்தை பல்வந்த் சிங் கொன்றுள்ளார். பின்னர் விக்ரம் சிங்கே தனது உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் மின்விசிறியின் அவரது உடலை தொங்கவிட்டு நாடகமாடி உள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த கூடுதல் எஸ்.பி பிபின் குமார், ‘கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு பல்வந்த் சிங்கையும், மனைவி பூஜாவையும் விக்ரம் சிங் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் தங்களது விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என விக்ரமை கொன்று மின்விசிறியில் தூக்கிட்டதுபோல் தொங்கவிட்டுள்ளனர்.
மறுநாள் காலை தனது மகன் உயிரை மாய்த்துக் கொண்டதாக குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறி நாடகமாடி உள்ளனர். இதனை அடுத்து இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விக்ரம் சிங்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பூஜாவையும், அவரது மாமனார் பல்வந்த் சிங்கையும் போலீசார் விசாரித்தனர் அப்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மருமகள் மற்றும் மாமனார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது