மாமியாரின் கள்ளக் காதலனை கட்டிப் போட்டு அடித்த மருமகள் : பின்னர் நேர்ந்த கொடூரம்!!

1145

சேலம்……

சேலம் மாவட்டம் இடைப்பாடி கொங்கணாபுரம் அருகே செந்தில் பாளையம் சேர்ந்தவர் முருகன் (57). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை மனைவி கமலாவுடன் (56) முருகனுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் கமலாவின் கள்ளக்காதல் விவகாரம் அவரது மகன் மற்றும் மருமகளுக்கு தெரிந்தது. அவரின் மகன் கார்த்தி மருமகள் சுமதி ஆகியோர் மாமியார் கமலாவையும் அவரது கள்ளக்காதலன் முருகனையும் கண்டித்தனர். இதனால் கார்த்தியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து முருகன் சண்டையிட்டு வந்தார்.

இதேபோல நேற்று முன்தினம் குடிபோதையில் கார்த்தியின் வீட்டிற்கு கமலாவின் கள்ளக்காதலன் முருகன் வந்தார். அப்போது வீட்டில் கார்த்தி இல்லை, அவரது மனைவி சுமதி மட்டும் இருந்தார்.

அப்போது சுமதியிடம் முருகன் தகராறில் ஈடுபட்டார், இதில் ஆத்திரம் அடைந்த சுமதி மற்றும் அவரது தாயார் அலமேலு (60) சுமதியின் மகன்கள் இருவர் என நான்கு பேர் சேர்ந்து முருகனை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் சுமதி முருகனை கட்டையால் தாக்கினார், அதில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கினார். இதனையடுத்து அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடினர், அங்கு மயங்கிக் கிடந்த முருகனை அவரது உறவினர்கள் இடைப்பாடி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை முருகன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனை தாக்கிய கமலாலயன் மருமகள் சுமதி, அவரின் தாயார் அலமேலு, சுமதியின் மகன்கள் நித்தீஷ், மௌலிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாமியாரின் கள்ளக்காதலை சகிக்கமுடியாத மருமகள் மாமியாரின் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.