மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ : தேவையில்லாமல் சிக்கிக்கொண்ட 2 இளைஞர்கள்!!

353

2 இளைஞர்கள்…..

தமிழகத்தில் காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலைய பொலிசார் கடந்த 3ம் திகதி வாகன சோ தனையில் ஈடுபட்ட போது வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலைய என்ற இளைஞன் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க ஜாமீன்தாரர் 2 பேரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். அதன்படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கான காவல்நிலையம் அழைத்து வந்தார்.

ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட,

நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.