மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர் : வயதை மறைத்து ஏமாற்றிய போலீஸ்காரர்!!

342

சென்னை….

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் வசித்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இளம்பெண், பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்து இருப்பதாகவும் அதனால்தான் இழப்பு ஏற்பட்டதாக கூறிய ஆண்ட்ரூஸ் அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் புனித நீர் எனக்கூறி ஏதோ ஒரு திரவத்தைக் குடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு அழகியை ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மிகவும் அக்கரையுடன் கவனித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

பின்னர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் மிஸ் தமிழ்நாடு அழகியை விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் அவரது வீட்டார்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறிள்ளனர்.

ஆண்ட்ரூஸீற்கு வயது அதிகமாக இருக்கும் போல என்று அவரது வீட்டாரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவரது வீட்டார்கள் 42 வயது தான் ஆகிறது அதிக நேரம் வெயிலில் பணிபுரிவதால் அப்படி தெரிகிறது என்று கூறி சமாளித்து உள்ளனர்.

அந்தப் பெண்ணிடமிருந்து சொத்து பத்திரங்கள், நகைகள், வங்கி கணக்கில் இருந்த பணம் என ஒவ்வொன்றாக சாமார்த்தியமாக ஆண்ட்ரூஸ்ஸ் கைப்பற்றிக் கொண்டதாகவும், வாடகை வீடு ஒன்றை பார்த்து அந்த பெண்ணை தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டில் இருந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு மிஸ் தமிழ்நாடு அழகியிடம் கிடைத்துள்ளது.

அதில் ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும் அவருடைய உண்மையான வயது ஐம்பத்தி ஆறு (56) என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அந்தபெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் வசிக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது அவர் உதவி ஆய்வாளர் இல்லை என்பதும் அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தன்னிடம் வயது குறைவு என்று கூறியது மட்டுமின்றி, சிறப்பு உதவி ஆய்வாளர் என்றும் பொய் கூறி ஏமாற்றியதாக ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் இருவரிடம் விசாரணையை துவக்கினர். விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளரான ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வயதை குறைத்து அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.