மீண்டும் திரையுலகத்துக்கு திரும்பிய நஸ்ரியாவின் புதிய அவதாரம் !

720

மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நஸ்ரியா. ஆனால் திரையுலத்தில் ஜொலித்து கொண்டிருந்த நேரத்திலே மலையாள நடிகர் பஹத் பாசிலை கல்யாணம் செய்து கொண்டு திரையுலகத்துக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில், இவர் மீண்டும் திரையுலகத்துக்கு திரும்புகிறார். நஸ்ரியா ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தாலும் அவர் நடிகையாக திரும்பவில்லை, பஹத் பாசிலின் உதவியோடு தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். பஹத் அடுத்த நடிக்கவுள்ள ‘அயூப்பிண்டே புத்தகம்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தை அமல் நீரத் என்பவர் இயக்குகிறார், இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது