முக ஸ்டாலின்………….
தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டதும் தங்கை கனிமொழியின் வீட்டுக்கு சென்ற முக ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளின் வென்று நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் முக ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். தேர்தலில் மாபெரும் பெற்றி பெற்ற பின்னர், ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு மட்டும் முக ஸ்டாலின் செல்லவில்லை, இதனால் கனிமொழி கடும் அப்செட்டில் இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
தேர்தலில் மிகவும் சுறுசுறுப்பாக பிரசாரங்களை மேற்கொண்டார் கனிமொழி, திமுகவுக்கு ஆதரவாக பல இடங்களில் சென்று வாக்கு சேகரித்தார். வெற்றி பெற்றவுடன் அண்ணன் வீட்டுக்கு வருவார் என காத்திருந்த கனிமொழிக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதனால் சோகத்தில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்நிலையில் 5 நிமிடத்தில் அந்த கவலைகளை போக்கியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின், முதல்வரானதும் அன்று மதியமே கனிமொழியின் வீட்டுக்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.
அத்துடன், அங்கிருந்த கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், கனிமொழியிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றுள்ளார். அப்போது, அமைச்சராக பதவியேற்றுள்ள துரைமுருகனும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.