முதலிரவன்று ரத்ததானம் செய்வதாகச் சொல்லி மாயமான மாப்பிள்ளை : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

306

கேரள…..

கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவருக்கு அடூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது.

அன்றைய தினம் நள்ளிரவு மனைவியிடம், “விபத்தில் நண்பர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நான் ரத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்” என கூறிவிட்டுச் சென்றுள்ளார்

பின்னர் காலை வெகுநேரம் ஆகியும் ரஷீத் வராததால் அவரது கைபேசிக்கு அழைத்தபோது சுவிட்ச் ஆப் என்று இருந்தது. இதையடுத்து வீட்டிலிருந்த 25 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணம் ஆகியவை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரஷீத் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

ஏற்கனவே ரிஷீத்துக்கு ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது.

இதையடுத்து இரண்டாவதாக இந்தப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் முதலிரவை முடித்து விட்டு அவரது நகை மற்றும் வரதட்சணையாக வந்த பணம் ரூ. 2 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த பணத்துடன் முதல் மனைவி வீட்டிலிருந்தபோது ரஷீத்தை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.