முதல் கல்யாணத்தில் துவண்டு போன தாய்க்கு மலர்ந்த காதல்… முன்னின்று திருமணம் நடத்திய மகள்!!

1512

அசாம்….

அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் இருந்துள்ளது. நிர்மலியின் முதல் திருமணம் அவருக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 20 ஆவது வயதில் தனது மகளோடு கணவரின் வீட்டை விட்டும் வெளியேறி உள்ளார் நிர்மலி. மிகவும் இளம் வயதிலேயே நிர்மலிக்கு இப்படி ஒரு நிலை வந்ததால், அதைக் கடந்து வாழ்வில் முன்னேறுவும் நிர்மலி முடிவு செய்துள்ளார்.

அதன் படி, ஒரு பக்கம் வேலை செய்து கொண்டே மறுபக்கம் அவர் படிக்கவும் ஆரம்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படியே பல ஆண்டுகள், நிர்மலியின் வாழ்க்கையும் கடந்து விட்டது. அதே போல, நிர்மலிக்கு பைக் ஓட்டுவது என்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், பைக்கில் பல இடங்களில் அவர் பயணம் மேற்கொண்டதையும் வழக்கமாக கொண்டு வந்ததாக தெரிகிறது.

அப்படி ஒரு பயணத்தின் போது, வாலிபர் ஒருவரை நிர்மலி சந்தித்துள்ளார். மேலும், அவருடன் நிர்மலிக்கு காதலும் உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவருக்கு இடையே பின் காதலும் உருவாகி உள்ள நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பி உள்ளனர்.

மறுபக்கம், தனது 20 வயதான மக்களிடம் நிர்மலி தனது திருமணத்திற்கான சம்மதத்தையும் கேட்டுள்ளார். தாயின் இரண்டாவது திருமணத்திற்கு எந்தவித தயக்கமும் இன்றி சம்மதமும் கூறி உள்ளார் நிர்மலியின் மகள். இதன் பின்னர், அவர் காதலித்த வாலிபருடன் நிர்மலியின் மகள் முன்பு வைத்தே திருமணம் நிகழ்ந்துள்ளது.

தனது தாயின் திருமணத்தில் மகள் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தாய்க்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மகளை பலரும் பாராட்டியும் வருகின்றனர். அதே வேளையில், இத்தனை துயர்கள் கடந்து தனக்கு பிடித்தது போல வாழ்க்கையை மாற்றி உள்ள நிர்மலியின் திறனையும் பலர் பாராட்டி வருகின்றனர்.