முதல் மாத சம்பளத்துடன் தாயை காண ஆசையாக சென்ற இளைஞர் விபத்தில் பரிதாப மரணம்!!

975

இளைஞர்..

கேரளாவில் முதல்மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை பார்க்க சென்ற இளைஞர் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஆசிப், மார்ச் மாத இறுதியில் தற்காலிக நர்ஸாக பணி நியமனம் பெற்று Corona Isolation Ward-ல் பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு மிகவும் துறுதுறுவென தன்னுடைய பணிகளையாற்றி வந்த ஆசிப் முதன்முதலாக சம்பளத்தை பெற்றுக் கொண்டார். சம்பளத்துடன் தன்னுடைய தாயே பார்க்க சொந்த ஊருக்கு சென்ற போது எதிரே வந்த லொறி மீது சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.