முன்னணி இயக்குனர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோடி நயன்தாரா!!

1191

ஜி.வி.பிரகாஷ் நாச்சியார் படத்திற்கு பிறகு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார். இவர் மீது வைத்த அத்தனை குறையையும் இந்த ஒரே படத்தில் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

இப்படம் குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.