பரோட்டா நடிகர் சத்தம் இல்லாமல் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம். புயல் நடிகரும், சாண்டல் காமெடியும் காமெடி பண்ணாமல் சீரியஸாகிவிட்டனர்.
புயல் இனி நடிப்பாரா என்ற அளவுக்கு பிரச்சனையில் சிக்கியுள்ளார். சாண்டலோ நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். இதனால் பரோட்டா நடிகரின் காட்டில் வாய்ப்பு மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போன்று மவுசு இருக்கும்போதே சம்பாதிக்க முடிவு செய்துள்ளார் பரோட்டா. அதனால் அவர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம். அடுத்து அவரும் ஹீரோவாக நடிப்பாரோ?