மூத்த திரைப்பட நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!!

870

மூத்த திரைப்பட நடிகர் மடாலா ரங்க ராவ் உடல்நலக்குறைவால் தனது 71-வது வயதில் காலமானார்.70-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளதோடு, 15 திரைப்படங்களை தயாரித்துள்ள ரங்க ராவ் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.

சில காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று ரங்க ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகராக மட்டுமில்லாமல் சமூக சேவைகள் செய்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ரங்க ராவின் மரணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.