மூன்று மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

345

அரியலூர்….

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர்.

26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு இருந்த நிலையில் இன்றைக்கு சகுந்தலா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி இருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் சகுந்தலாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மூன்று மாத கர்ப்பிணி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை இழந்து 8 மாத பெண் குழந்தை தவிப்பதை பார்த்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.