மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை : கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்த வார்த்தைகள்!!

269

கேரளா….

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா (14) மற்றும் அஸ்வந்தா (6) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை பிரிந்த விஜிதா இரண்டு ஆண்டுகளாக அஜித்குமாருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நால்வர் அடங்கிய இந்த குடும்பம் ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.

இதனிடையில் அஜித்குமார் மீது அவர் மாமாவை கொலை செய்ததாக வழக்கு உள்ளது, மற்றும் மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தனர் என தெரியவந்துள்ளது.

இதையே தான் அவர்கள் கடிதம் மூலம் எழுதி வைத்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட நால்வரின் சடலங்களுக்கும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.