நடிகர் விவேக் சினிமாவில் காலடி எடுத்து வைத்த காலம் முதலே சமூக அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். மேலும் தற்போது படவாய்ப்புகள் குறைந்தாலும் பல சமூக பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது அரசியலில் நிலவும் சூழ்நிலை பற்றி பேசியுள்ள அவர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
“அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாலே போதும்; கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.
இவர் ரஜினியை பற்றி தான் கூறுகிறார் என செய்தி பரவவே, உடனே ட்விட்டரில் இது பற்றி விளக்கமளித்துள்ளார். “யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் அரசியலிலும் இல்லை” என விவேக் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஷால் இன்று அளித்துள்ள பேட்டியில் ”விவேக் அரசியலுக்கு வரவேண்டும். வந்தால் ஒரு தொகுதிக்கு நல்ல எம்.எல்.ஏ கிடைப்பார்” என கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள விவேக் “விஷாலின் அன்புக்கு நன்றி. நான் “மரம், மாணவர்கள்” என்று கலாம் அய்யா கொடுத்த வேலையை செய்கிறேன். அரசியலுக்கு நான் சரிப்படுவேனா, தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.