ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்!!

318

ஜோதி ரெட்டி….

ரயிலிலிருந்து தவறி விழுந்து இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி ரெட்டி (26). இவர் ஐதராபாத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்திருக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனையடுத்து, சமீபத்தில் முடிந்த சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு நடிகை ஜோதி ரெட்டி ஐதராபாத்துக்கு சென்றிருக்கிறார்.

கடப்பாவிலிருந்து ரயில் மூலம் ஐதராபாத்தில் உள்ள கச்சிகூடாவிற்கு செல்லும் வழியில் அசந்து தூங்கி இருக்கிறார். தூக்க கலக்கத்தில் கச்சிகூடா ஸ்டேஷனுக்கு பதில் ஷாட்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி இருக்கிறார் ஜோதி.

இதனையடுத்து, தான் தவறான ஸ்டேஷனில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி, மீண்டும் ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது, ரயில் கிளம்பிய நிலையில், ஓடி சென்று அவர் ஏற முயற்சி செய்தார்.

அப்போது, தவறி பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜோதி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூக்கத்தால் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.