ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய நபர்: இறுதியாக கிடைத்த அ.தி.ரடி தண்டனை!!

391

பிரிட்டன்…

பிரிட்டன் நாட்டில் நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை நடத்திய போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். பிரிட்டனின் டட்டஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ஆரோன் ஓ ஹல்லோரன்.

இவரது தனது மிட்சுபிஷி காரை டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்தின் உள் எடுத்து சென்றதோடு, ஆஸ்டன் பகுதியை நோக்கி சுமார் அரை மைல் தூரத்துக்கு தனது காரை தண்டவாளத்தில் இயக்கியுள்ளார். பின்னர் காரை தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அவர் தப்பிசென்றார்.

காரின் உள்ளே அவரது செல்போன் இருந்த நிலையில், அதனை கைப்பற்றிய போலீசார், செல்போன் மூலம் ஆரோனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், 156 பவுண்ட் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக ரயில் சேவையில் 8 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகம் மற்றும் பயணிகளுக்கு 23 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தானது மற்றும் அர்த்தமற்ற செயல் என்று கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், நல்ல வேளையாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தனது முட்டாள்தனமான செயல்களை செய்வதற்கு ஆரோனுக்கு சிறையில் அதிக நேரம் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.