பீகார் மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த பொறியாளர் சஜத் அலி அன்சாரி என்பவருக்கு 2011 ஆம் ஆண்டு ராங் கால் மூலம் ஜூகி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது.
பின்னர், அன்சாரிக்கு வேலை இல்லாத காரணத்தால் பொருளாதார பிரச்சனை தலைதூக்கியதையடுத்து, இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அன்சாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மனைவி தட்டிகேட்டதால் கணவன் -மனைவி இடையே தொடர்ந்து சண்டை நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், இருவருக்கும் மோதல் முற்றியுள்ள நிலையில் அன்சாரி, ஜூகியை அடித்து கொன்று விட்டார்.
இதன் பிறகு செய்வதறியாமல் தவித்த அவர், தனது நெருங்கிய உறவினர்கள் இருவரை உதவிக்கு அழைத்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து ஜூகியின் சடலத்தை ஏழு துண்டுகளாக வெட்டி, வீட்டில் இருந்த ஏழு அட்டைப் பெட்டிகளில் அடைத்து வெளியே வீசி ஏறிந்து விட்டனர்.
துர்நாற்றம் வீசி விவரம் வெளியே தெரியவே பொலிசார் அந்த அட்டைப் பெட்டியை கைபற்றி சடலத்தை மீட்டனர்.
அட்டை பெட்டியில் எழுதப்பட்டிருந்த முகவரியை வைத்து அன்சாரியை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரை கைதுசெய்ததன் மூலம் மேற்கூறப்பட்ட தகவல்கள் தெரியவந்துள்ளன.