ராங் ரூட்டில் வந்த லாரி…தட்டிக் கேட்ட டிராபிக் போலீஸை கன்னத்தில் அறைந்த ஓட்டுநர்: வெளியான வீடியோவால் பரபரப்பு!!

244

சென்னை….

போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் படி கூறியுள்ளனர். போரூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியினால் மாறிய சாலைகளால் குழம்பிப்போன வடமாநிலத்தவர் மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்து உள்ளார்.

மேலும், போலீசார் கூறியதை ஏற்க மறுத்து ஓட்டுநர் முஸ்தாக் அகமது என்பவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து காவலர் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார், லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமதை கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தா.க்.கியது, ஆ.பா.சமாக பேசியது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

போக்குவரத்து காவலரை வடமாநில ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.