லாரி சக்கரத்தில் சிக்கிய சிறுவன் : நெஞ்சை பதற வைத்த காட்சி!!

275

காஞ்சிபுரம் :

எம் சாண்ட் ஏற்றி வந்து இறக்கிய லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

காஞ்சிபுரம் அருட்பெருஞ் செல்வி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நான்கு வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் அருட்பெருஞ் செல்வி தெருவில் இவரது வீட்டின் அருகே நடை பெறும் கட்டுமானப்பணிக்காக லாரி ஒன்று எம்சாண்ட் ஏற்றி வந்து இறக்கியுள்ளது.

வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிறுவன் மோனிஷ் விளையாட்டாக லாரியின் முகப்பின் பின்புறம் பிடித்துக்கொண்டு நின்றுள்ளான். இதனை கவனிக்காமல் லாரி ஓட்டுனர் லாரியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளார்.

அப்போது பின்புறம் நின்றிருந்த சிறுவன் மோனிஷ் லாரியை பிடித்து ஓடி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிறுவன் மோனிஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எம்சாண்ட் ஏற்றி வந்த லாரியை பிடித்துக்கொண்டு சிறுவன் ஓடுவதும், இதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் லாரியை ஓட்டிச் செல்வதும், சிறுவன் கீழே விழுந்து சக்கரம் ஏறுவதும், சிறுவனை அருகில் உள்ளவர்கள் தூக்கிய நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.